வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 6 ஆவது அமர்வு கடந்த 20 ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி அமர்வில் வலிகாமம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்களும் ஒரு குடும்பத் தலைவருக்கு துவிச்சக்கர வண்டி திருத்தகம் நடத்துவதற்கான பொருள்களும் சபை நிதியில் இருந்து வழங்கப்பட்டன.

இந்தப் பொருள்களை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வழங்கி வைத்தனர்.

Share the Post

You May Also Like