வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டிய சத்தியலிங்கம்

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தின் முதன்நிலையையும் பெற்ற சிவபுரம் அ.த.கபாடசாலை மாணவியான செல்வி பா.ஹர்த்திக்ஹன்சிகாவை வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவரது வீட்டிற்கு சென்று பாராட்டுதல்களை தெரிவித்தார்.

நேற்று (09.08.2018) சிவபுரத்திலுள்ள மாணவியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற மாகாணசபை உறுப்பினர் மாணவியை பாராட்டி கௌவித்ததுடன் தொடர்ந்தும் கல்வியில் ஊக்கத்துடன் ஈடுபட்டு சமூகத்தில் உச்சநிலைக்கு வளரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Share the Post

You May Also Like