அரசமைப்பு சபைக்கு அமைச்சர் தலதா, சமல் ராஜபக்ஷவின் பெயர்கள் பரிந்துரை

அரசமைப்பு சபையின் உறுப்பினர்களாக அமைச்சர் தலதா ​அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அரசமைப்பு சபைக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் பரிந்துரைகளுக்கமைய, நியமிக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் குறித்த இருவரினதும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் யோசனையின் கீழ் 3 சிவில் உறுப்பினர்களை அரசமைப்பு சபைக்கு நியமிக்க வேண்டும். இந்த சிவில் உறுப்பினர்களாக இராஜதந்திர அதிகாரிகளான ஜயந்த தனபால, அஹமட் ஜாவெட் யூசுப் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வகுமாரனின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோல் அரசமைப்பு சபைக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்று கட்சி ஒன்றின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like