அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் சபாநாயகரிடம்

அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர், கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வாரத்திற்குள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

பத்து உறுப்பினர்களை கொண்டஅரசியலமைப்புச் சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் ஊடாக நியமிக்கப்படுவார்கள்.

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சியின் உறுப்பினர்கள் ஆகிய ஆறு பேரின் பெயர்கள் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உத்தியோகபூர்வ காலம் இன்னும் முடிவடையவில்லை, என்பதால் அவர் ஏற்கனவே அரசியலமைப்பு சபையில் உறுப்பினராக உள்ளார்.

Share the Post

You May Also Like