பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ஒதுக்கீடு.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பளை நகரப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் போரினால் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த அதேவேளை கம்பரலிய வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரையாடி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஒன்பது வீதிகள் புனரமைப்பதற்கு 180 மில்லியன் ரூபாவும் பொதுச்சந்தை புனரமைப்புக்கு 1 மில்லியன் ரூபாவும் ஆலயங்கள் புனரமைப்புக்கு 01 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Share the Post

You May Also Like