ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சத்தியலிங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்

08.10.2018ல்நடைபெற்ற வெங்கலச் செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மா.ச.உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட முன் மொழிவுகள்

பலவருடங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட மீள்குடியேற்ற, குடியேற்ற கிராமங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் சேதமடைந்துள்ளமையினால் புதிதாக வரவுள்ள வீட்டுத்திட்டத்தில் இவர்களையும் உள்வாங்குதல்வேண்டும்.

கங்கங்களம் மயானம் யானைகள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதால் அந்தப்பகுதியில் பிரதேசசபையால் வீதிவிளக்குகள் பொருத்தப்படல்வேண்டும்.

மன்னார் வீதியின் குருக்கள் புதுக்குளத்திலிருந்து பறயனாலங்குளம் வரையான வீதிக்கு வடக்கு புறமாக முன்னர் அமைக்கப்பட்ட முன்னரங்க காவலரண் காணப்பட்டபகுதி (
FDL) முன்பு மக்களால் பயிர்ச்செய்கை செய்யப்பட்டதாகும். தற்போதுஇந்தப்பகுதி வனவளத்திணைக்களத்தால் கல்போடப்பட்டுள்ளது. எனவே மீண்டும் மக்களுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படல் வேண்டும்.

வவுனியாமாவட்டத்தில் புதிதாக குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரை தொடக்கம் 1 ஏக்கர் மேட்டுக் காணிகள் மட்டுமே வழங்கப்பட்டு அதில் வீடு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது வாழ்வாதாரத்தை மேப்படுத்த நீண்டகாலமாக கைவிடப்பட்டுள்ள உரிமை கோரப்படாத குளங்களை புனரமைத்து குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வயற்காணிகள் பகிர்ந்தளி க்கப்படுதல் வேண்டும்.

செட்டிகுளத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கீழ் மல்வத்து ஓயாதிட்டம் இதுவரை மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனினும் அண்மையில் துறைசார் அமைச்சர் அனுராதபுரத்தில் இந்ததிட்டத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளார்.

இந்ததிட்டம் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படவுள்ள யானை-மனித மோதலை (Elephant-Human conflict)  தடுக்க திட்டத்தினூடாக மின்சார யானைவேலி அமைக்கப்படல்வேண்டும். அத்துடன் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படல் வேண்டும்.

Share the Post

You May Also Like