கல்வி அபிவிருத்திக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா, வலி.வடக்கு பிரதேசத்திலுள்ள பாடசாவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தரம் – 1 பாடசாலைகளான யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி, அருனோதயக் கல்லூரி ஆகியவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தலா 10 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதி கல்வி அபிவிருத்தியுடன் மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடாகிய விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்கமைப்புக்களை வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like