கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கிளை புனரமைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தேசிய மாநாட்டை முன்னிட்டு சகல மாவட்டங்களிலும் மூலக்கிளை, தொகுதிக்கிளை மற்றும் மாவட்டக் கிளை என்பவற்றைப் புனரமைத்து வருகின்றது.

அந்தவகையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்க்கிளை தெரிவு கடந்த 27 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் கௌரவ மாவை சேனாதிராஜா தலைமையில் மாவட்ட காரியாலயமான அறிவகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நிகழ்வில் நாடாளளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் த.குருகுலராஜா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள்m உப தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேச கிளைகளின் நிர்வாக உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like