வடமராட்சி பாடசாலைகளுக்கு சுமந்திரன் கல்வி அபிவிருத்தி!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் அலுமாரிகழைளக் கொள்வனவுசெய்வதற்குத் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீ{டு மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஒதுக்கப்பட்ட இந்த நிதியில் இருந்து மருதங்கேணிகோட்டத்துக்கு உட்பட்டபாடசாலைகள் அனைத்துக்கும் என கொள்வனவு செய்யப்பட்ட 33 அலுமாரிகள் மருதங்கேணி பிரதேசசெயலகத்தில்வைத்து பாடசாலைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு நாடாளுமன்றஉறுப்பினர் ம.சுமந்திரன், வடக்குமாகணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் வருகைதருவதாக இருந்தபோதும் இறுதிநேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர்கள் வருகைதரவில்லை.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபையின்  தவிசாளர் அரியகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் சசி  மற்றும் பிரதேசசபைஉறுப்பினர் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு அலுமாரிகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேசசெயலக உத்தியோத்தர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like