தற்போதைய அரசியல் சூழலை எமது இனத்துக்கு சாதகமாக்க முயற்சிக்கின்றோம்-சு.சுரேன்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களை தமிழர் தரப்பிற்கு தலைமைத்துவம் வழங்கும் இயக்கமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகிய நாம் எமது இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கு ஏற்றவகையில் சாதகமாக கையாள்வதற்கு முயற்ச்சிக்கின்றோம் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் மாசர்,முகாவில் கிராம அலுவலர் பிரிவிலுள்ள விளையாட்டுக் கழகங்களை சந்தித்து கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கும் நிகழ்வில் கலந்துரையாடிய வேளை அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில் நாம் தொடர்ச்சியாக இலங்கை ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட தரப்பினராகவே இருந்து வந்துள்ளோம்.காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறும் அரசுகள் எம்மை ஒரு கறிவேப்பிலை போன்று தமது தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு தமது வாக்குறுதிகளை நிறைவேற்ராது இழுத்தடிப்பு செய்து ஏமாற்றி வந்தது யாவரும் அறிந்ததே, இதனாலேயே தற்போதுள்ள அரசியல் சூழலில் எமது கட்சியின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துள்ளனர் எமது நீண்டகால பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவேன் என்ற எழுத்துமூலமான உத்தரவாதம் வழங்கும் தரப்பிற்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பரிசீலிப்பது என்பதாகும். ஆகவே ஒருபோதும் நாம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட முயற்சிக்கமாட்டோம். தற்போதைய அரசியல் சூழலை எமது இனத்துக்கு சாதகமாக்கவே  முயற்சிக்கின்றோம் என்றார்.

இங்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உபதவிசாளர் மு.கஜன், உறுப்பினர்களான வீரபாகுதேவர்,அருள்ச்செல்வி,ரமேஷ்,கோகுல்ராஜ் மற்றும் விளையாட்டு கழகத்தினரும் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like