சூழகம் ஊடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

புங்குடுதீவைச் சேர்ந்த அமரத்துவமடைந்த சுப்பையா சபாரத்தினம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு, சூழலியல் மேம்பாட்டு அமைவகம் (சூழகம்) ஊடாக அண்மையில் புங்குடுதீவு கணேசா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உதவித் திட்டத்தை வழங்கிய சூழகம் ஊடாக அமரரின் புதல்வர் சபாரத்தினம் கோணேஸ்வரனால் வழங்கப்பட்ட நிதியுதவியிலேயே அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இரங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளரும் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளைத் தலைவருமாகிய பெ.கனகசபாபதி, புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும், தமிழ் சி.என்.என்.பவுண்டேசன் நிறுவுநருமான கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலன், வலிகாமம் வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சே.கலையமுதன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் மற்றும் அதிபர் , ஆசிரியர்கள் , நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளித்திருந்தனர் .

இதே தினத்தில் கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல சிறார்களுக்கும் மூன்றுவேளை உணவும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share the Post

You May Also Like