தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் விக்கி!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதால், அவரது தமிழசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர் கட்சியிலிருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவாரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், மாவை தமது கட்சியின் நிலைப்பாட்டை இன்று அறிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like