பயனாளிகளுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கல் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 

தனது 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 12 குடும்பங்களுக்கு தலா ரூ.20,000/= படி சுமார் ரூ.2,40,000/= பெறுமதியான கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று 08.11.2017 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கோப்பாய் கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற விழாவில் மேற்படி கோழிக்குஞ்சுகள் பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் , வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊரெழு பகுதிச்செயற்பாட்டாளர் முகுந்தன், கால்நடை வைத்திய அதிகாரி எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Share the Post

You May Also Like