நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை! – மைத்திரியின் அராஜகத்தனத்துக்கு  ‘வேட்டு’ வைத்தது உயர்நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படும் எனவும் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது மைத்திரியின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

Share the Post

You May Also Like