சயந்தனின் நிதி ஒதுக்கீட்டில் சனசமூக நிலையங்களுக்கு கதிரைகள்!

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தனின் உறுப்பினர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சனசமூக நிலையங்களுக்கு பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சின்னப்பொடியன் இரத்தினசிங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சயந்தன் இந்தக் கதிரைகளை வழங்கிவைத்தார்.

தாவளை இயற்றாலை விநாயகர் சனசமூக நிலையம் மந்துவில் வடக்கு வள்ளுவன் சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கே இந்தக் கதிரைகள் வழங்கப்பட்டன.

Share the Post

You May Also Like