நீர்வளம் பாதுகாப்பு தொடர்பில் வலி.கிழக்கில் ஆய்வு!

அச்சுவேலி பகுதியில் வசிக்கின்ற மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வலி.கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளரும் வட்டார உறுப்பினருமான ம.கபிலனால் வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அதையடுத்து நீர்ப்பாசன பொறியியலாளர் சர்வராஜாவைத்  தொடர்பு கொண்டு பாதிக்கப்படும் பகுதிகளில் கள நிலைமைகளை ஆராய்ந்திருந்தோம். இங்கு எதிர்காலத்தில் எவ்வாறான முறையில் மக்களும் வெள்ளப்பாதிப்புக்களுக்கு உள்ளாகாமல் அதேவேளை நீர்வளத்தினைப் பாதுகாப்பதனைக் கருத்தில் கொண்டு மழைநீரையும் கடலுக்குச் செல்லவிடாமல் தடுப்பது பற்றி ஆலோசனைகளையும் திட்டங்களை வகுப்பதற்கான ஆரம்பகட்டச் சந்திப்பாக இது அமைந்தது.

ஏற்கனவே பொறியலாளர் சர்வேந்திரா வலி.கிழக்கு பிரதேசசபையில் நிலத்தடி நீர்ப்பாதுகாப்புத்திட்டம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றுதலுக்கு விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் களப்பயணத்தில் வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அகிபனும் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like