வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டம் ரவிகரனால் முன்னெடுப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரனால் முன்னெடுக்கப்படும் ”வாழ்வோம் வளம்பெறுவோம்” செயற்றிட்டத்தின் இருபத்திரெண்டாம் கட்டமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பனிக்கன்குளம் பொதுநோக்கு மண்டகத்தில், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சண்முகம் – தவசீலன்  தலைமையில் இடம்பெற்றது.

புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் குறித்த செயற்றிட்டத்தின், இருபத்திரெண்டாம் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த பத்தொன்பது குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில் –

குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பினை நோக்காகக்கொண்டு நாளாந்த உணவுத்தேவைக்கு இடர்படும் குடும்பங்களுக்கான ஒத்துழைப்பாக வாழ்வோம் வளம்பெறுவோம் என்னும் செயற்றிட்டமானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா  ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் அன்பரின் பணப்பங்களிப்பில் நடைபெற்று முடிந்த இருபத்திரெண்டாம் கட்டத்துடன் இது வரையில் 743(எழுநூற்று நாற்பத்து மூன்று) குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருக்கின்றன என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இக்கட்டத்திற்காக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் உறவான தர்மலிங்கம் – சுபாசுக்கரனின்  குடும்பத்தினர் இவ்வுதவிகளை வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

செயற்றிட்டத்தின் இருபத்திரெண்டாம் கட்டத்தில் பத்தொன்பது குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு 380கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன் , கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர் த.மனோகரன், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ச.தவசீலன் ஆகியோருடன், பயனாளிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like