யாழ்.முதல்வரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

யாழ்.மாநகர முதல்வரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான  இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் 35 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு செய்யப்பட்டன.

யாழ் மாநகர முதல்வரும், முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினருமாகிய  இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் நேற்று முதலாம் திகதி மாலை 4.00 மணியளவில் பாசையூர் கடற்கரை முன்றிலில் வைத்து பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 33 பயனாளிகளுக்கான துவிச்சக்கரவண்டிகளை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் வழங்கிவைத்தார். பாடசாலை மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தில் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share the Post

You May Also Like