பா.உ ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியால் இருதயபுரம் 12ம் குறுக்கு வீதி புனரமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் பரிந்துரைக்கமைவாக கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக 02 மில்லியன் ரூபா செலவில் இருதயபுரம் 12ம் குறுக்கு வீதி கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகரசபை உறுப்பினர்களான வி.பூபாளராஜா, து.மதன், பு.ரூபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயண சிரமத்தை ஏற்படுத்திய இவ்வீதியினை புனரமைத்துத் தருமாறு மாநகரசபை உறுப்பினர் பூபாளராஜா அவர்களிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மாநகர சபை உறுப்பினரால் இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினரின் கவத்திற்குக் கொண்டு வரப்பட்டு கம்பெரலிய திட்டத்தின் மூலம் 02 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like