கனேடிய ஆணையாளரை சந்தித்தார் ரவிகரன்

 


கனேடிய உயர் ஆணையாளர்  டேவிட் மெக்னோ மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்று  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் ரவிகரனோடு கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரனும் கலந்திருந்தார்.

மேலும் இந்த சந்திப்பில், சமகால அரசியல் நிலைவரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நந்திக்கடல் ஆக்கிரமிப்பு, மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள், மகாவலி (எல்) வலயம் தொடர்பன பிரச்சினைகள், விவசாய காணிகள் அபகரிப்பு செய்யப்படுவது தொடரப்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன எனத் தெரியவருகின்றது.

Share the Post

You May Also Like