ஜனாதிபதிக்கு எதிரான பிரேரனை; ஆதரவளிக்காது கூட்டமைப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

இந்நிலையில், அவ்வாறு ஜனாதிபதியை மாற்றியமைப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக விரோத – அரசமைப்புக்கு எதிரான ஆட்சிக்கெதிராகவே செயற்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் இந்தக் கருத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Share the Post

You May Also Like