1,099 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!

வடக்கில்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களி​ல் படையினர் வசமிருக்கும் 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி 2 ஆம் வாரத்தில் விடுவிக்கப்படும் என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.


இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன. ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும். அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன. இராணுவத்தினாரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன.

மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராம சேவகர் பிரிவின் கீ​ழ், 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share the Post

You May Also Like