மொந்தையும் பழசு! கள்ளும் பழசு!

நக்கீரன்

நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ……. ஆனால் குடிகாரன் சத்தியம் விடிந்தால் போச்சு என்பார்கள்.  “கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமுசில பிழைகள் விட்டுள்ளதுஅந்தப் பிழைகளை எதிர்காலத்தில விட மாட்டோம்” என  ஐந்தாவது தடவையாகப்  பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட இரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

 

இரணில்  தனது கட்சி விட்ட பிழைகள் எவையெவை என்பதைச் சொல்லவில்லை.  இருந்தும் அந்தப் பிழைகள் ஊடகங்களில் அலசப்பட்ட பிழைகள்தான்.

 

(1) திறைச்சேரி பணமுறிவு விற்பனையில் ஏற்பட்ட உரூபா 11 பில்லியன்  இழப்பு. தவறு செய்த மத்திய வங்கி ஆளுநர் மகேந்திரனைக் காப்பாற்ற பிரதமர் எடுத்த முயற்சி.

 

(2) நாடாளுமன்ற அமைச்சர்கள்உறுப்பினர்கள்மாகாணசபை அமைச்சர்கள்உறுப்பினர்கள்மருத்தவர்கள்சட்டத்தரணிகள் போன்றவர்கள் இறக்குமதி செய்யும் ஆடம்பர வண்டிகளுக்கு  இறக்குமதி வரி  விலக்கு அளித்தது. இதனால் திறைச்சேரிக்குப்  பல கோடி வரிவருமான இழப்பு ஏற்பட்டது.

 

(3) அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு உரூபா 10,000 சம்பள உயர்வுஇது அரசின்  செலவை அதிகரித்து  கருவூலத்தைக் காலி செய்ய உதவியது.

 

(4) ஊடகவியலாளர்கள் லசந்தா விக்கிரமதுங்கபிரதாப் ஏக்னேலிகொடவிளையாட்டு வீரர் வாசிம் தயூ தீன் கொலை விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.  குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

 

(5) இராசபக்சா மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிரான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

 

(6) நா.உறுப்பினர்களது சம்பளத்தை சனவரி 01, 2018 இல்  உரூபா 65,000 இல் இருந்து உரூபா 140,000 உயர்த்தியது. துணை அமைச்சர்கள் சம்பளம் உரூபா 63,000 இல் இருந்து உரூபா 135,000 ஆக அதிகரிப்பு. ஒரு அமைச்சருக்கு அரசாங்கம் மாதம் உரூபா 7.5 மில்லியன் (75 இலட்சம்) செலவழிப்பதாக ஒரு ஊடகம் தெரிவித்துள்ளது. 45 மாகாண அமைச்சர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுவிட்டது.

 

(7) 23 மாநகர சபைகள்,  41 நகரசபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என மொத்தம் 336 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 4486 இல் இருந்து 8,825 ஆக அதிகரித்தமை. அதாவது இரட்டிப்பாக அதிகரிதமை.  2016 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு  தொடர் செலவினம் உரூபா 170,168 மில்லியன்,  மூலதனச் செலவு உரூபா50,921 மில்லியன் ஆக அதிகரித்தது. உறுப்பினர்களின் மாதச் சம்பளம் எவ்வளவுமாநகர மேயர் – உரூபா 30,000,  துணை மேயர் உரூபா 25,000,  மாநகர உறுப்பினர் உரூபா 20,000.

இதன் அடிப்படையில் மாதச் செலவு உரூபா 90 மில்லியன்ஆண்டுச் செலவு உரூபா 1.08 பில்லியன்நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும் போது இப்படியான  செலவு  வீண் செலவு என மக்கள் நினைக்கிறார்கள்.

 

இப்போதுள்ள அரசியல் யாப்பின் அடிப்படையில் 30 அமைச்சர்கள், 40 துணை அமைச்சர்கள் ஆக மொத்தம் 70 பேரை நியமிக்கலாம்இந்த விதிக்கு ஒரு விதிவிலக்குண்டுஒரு தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் ஏனைய துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் மொத்தம் 85 பேரை நியமிக்க இடம் உண்டு.

 

மே 2, 2017  இல் அமைச்சரவை மறுசீர்  செய்யப்பட்ட போது அமைச்சர்களின் எண்ணிக்கை 46 இல் இருந்து 47 ஆக உயர்த்தப்பட்டதுதுணை அமைச்சர்கள் 25, அரசாங்க அமைச்சர்கள் 15 ஆக மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 92  ஆகும்.  மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையான 225 இல் 92  பேர் என்பது 40.88  விழுக்காடாகும்.

 

இலங்கை தெற்காசியாவில் உள்ள சனநாயக நாடுகளில் மிகவும் பழமையாது எனப் பெருமை பேசப்படுகிறதுசுதந்திரம் பெற்ற ஆண்டில் (1948) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  இரண்டாவது இடத்தில் இருந்ததுஇன்று 26 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் அமைச்சரவையின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

 

அட்டவணை 1

நாடு

குடித்தொகை

அமைச்சர்கள்

ஐக்கிய இராச்சியம்

65,466,181

21

பிரான்ஸ்

64,909,166

22

சிங்கப்பூர்

5,774,875

22

இந்தோனிசியா

263,189,525

34

மலேசியா

31,62 ,000

24

பாகிஸ்தான்

202,691,616

21

சிறிலங்கா

20,895,011

30

 

கடந்த டிசெம்பர் 20 இல் இரணில் விக்கிரமசிங்க பிரதமராக  சனாதிபதி சிறிசேனா முன் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்அடுத்த நாள் 28 அமைச்சர்கள்,  15 இராசாங்க அமைச்சர்கள் மற்றும் 8 துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்ஆனால் இந்த அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்த இரணில் விக்கிரமசிங்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்.  சனாபதியும் பிரதமரும் “அமைச்சர்கள்” அல்ல எனவே அந்த இரண்டு பேரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் அமைச்சர்களின் 28 ஆகிவிடும்! ஆகவே இன்னும்  இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்இது தொடர்பாகச்  சட்டத்தில் ஏதாவது ஓட்டை ஒடிசல் இருக்கிறதா எனச் சட்டமா அதிபரின் ஆலோசனையை பிரதமர் இரணில் கேட்டிருக்கிறார்.

 

இன்னொரு வழியும் ஆராயப்படுகிறதுஆளும் கட்சி பக்கத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்இவர் மட்டக்களப்பில் போட்டியிட்டுயிட்டு வெற்றிபெற்றவர்எனவே ஐதேமு இன் உறுப்பினர்கள் 103 ம் இந்த நா.உறுப்பினரும் சேர்ந்தால் அது ஒரு தேசிய அரசாங்கம் ஆகிவிடும் எனவே அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக (உச்ச எல்லை 40) உயர்த்தத் தடையிருக்காது!

 

பிரதமர் இரணில் எதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்தப் படாதபாடு படுகிறார்? அவரை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்த்தப் பாடுபட்டவர்கள் அதற்குக் கைமாறாக அமைச்சர் பதவி  கேட்டு அடம் பிடிக்கிறார்கள்.

 

மீன் எப்படி தண்ணீர் இல்லாமல் வாழ முடியாதோ அதே மாதிரித்தான் இந்த தென்னிலங்கை  நா.உறுப்பினர்களும்! அமைச்சராகத் தொகுதியில் உலா வந்தால்த்தான் அவர்களுக்கு மதிப்பு. மாலை மரியாதை.  இல்லாவிட்டால் மதிப்பில்லை. அமைச்சராக இருந்தால் நாலு பேருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம். ஊரா வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற பழமொழிக்கு ஒப்ப தனது தொகுதிக்கு வீடுகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை எனக் கட்டிக் கொடுக்கலாம்.

 

இப்படித் தனக்கு அமைச்சர் பதவி  தந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களில் பாலித இறங்கே பண்டார ஒருவர். அவர் சொல்லும் காரணம் மிகவும் விசித்திரமானது.

 

தனக்கு இராசபக்சா – சிறிசேனா தரப்பு அணிமாற  உரூபா 500 மில்லியன் (உரூபா 50 கோடிமற்றும் அமைச்ரவையில் அமைச்சர் பதவி தர முன்வந்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்.  மேலும்  அப்படி அமைச்சர் பதவி தராவிட்டால் தான் “வில்லங்கமான முடிவை”  எடுக்க வேண்டிவரும் எனவும் வெருட்டுகிறார்.  இன்னொரு நா.உறுப்பினர் மூப்பு அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்கிறார்தன்னை விட இளையவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கப் பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்வில்லங்கமான முடிவு எது என்பது எல்லோருக்கும்  தெரியும். அவர்களுக்குத் திறமை அடிப்படையில் அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டது என்ற வாதத்தை அவர் ஏற்க மறுக்கிறார்தான் எப்போதும் மழையிலும் – வெய்யிலிலும் கட்சிக்கு விசுவாசகமாக நடந்து வந்திருப்பதாகவும் அதைவிட வேறு என்ன “திறமை” வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் இன்னொரு நா.உறுப்பினரும் அமைச்சர்  பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களுத்துறை தேர்தல் மாவட்ட நா.உறுப்பினர் இலட்சுமன் விஜயமன்ன  என்ற உறுப்பினரே தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்கிறார். “எனக்கு அமைச்சர் பதவி வழங்காதது அநீதியானதுநான் கட்சிகட்சித் தலைமை நெருக்கடிக்குள் இருக்கும் போதெல்லாம்  அதனைக் காப்பாற்றியவன்.நான் ஐதேக இல் ஜேஆர் ஜெயவர்த்தன காலத்தில் இருந்து தொடர்ந்து இருந்து வருகிறேன்அமைச்சர் பதவி இல்லையென்றால் நான் ஒரு அரசியல் முடிவை எடுக்க இருக்கிறேன்அந்த முடிவு என்ன என்பதை இப்போதைக்குச் சொல்ல மாட்டேன்” என்கிறார்ஜேஆர் காலத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது சரியென்றால் மனிதர் 41 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்எனவே அவர் கேட்பது நியாயம் போல்ப் படுகிறது.

 

தனது தகுதிக்கும் மூப்புக்கும் ஏற்ற அமைச்சுகள் தனக்குத் தரப்படவில்லை என்ற சோகத்தில் மூத்த அமைச்சர் இலட்சுமன் கிரியெல இருக்கிறார்அவர் தனது அதிருப்தியைப் பிரதமருக்குத் தெரிவித்திருப்பாதாகத் தெரிகிறதுஅவர் பதவி விலகலாம் எனவும் பேசப்படுகிறதுஇரணிலை மீண்டும் பிரதமர் ஆக்க வலுவாகப் பாடுபட்ட அமைச்சர்களில் கிரியெல முக்கிய இடம் வகித்தார்ஆனால் அவருக்குத் தற்போது  இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம்   (Ceylon Ceramic Corporation, KESCO, BCC Company and the State Resources Management Corporation – (இது வங்குறோத்து அடிக்க இருக்கிறதுஆகிய சின்ன நிறுவனங்களே கொடுக்கப்பட்டுள்ளனஒக்தோபர் 26 க்கு முன்னர் அரச நிறுவன மற்றும் மலைநாட்டு மரபுரிமை அமைச்சின் கீழ் அரச வங்கிகள்ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்ஸ்ரீலங்கா விமானசேவைஹில்டன் ஹோட்டல் போன்ற பெரிய நிறுவனங்கள் (State Enterprise Development Ministry,  all state banks, Sri Lanka Insurance, SriLankan Airlines, Hilton and several other SOEs) போன்றவற்றுக்கு அமைச்சராக இருந்தார்.

 

கண்டியைச் சேர்ந்த கிரியல கண்டி மாவட்ட ஐதேக இன் தலைவராவார். 2015 இல் நடந்த தேர்தலில் அதிகளவு விருப்பு வாக்குகள் (200,000) பெற்று வெற்றியீட்டி இருந்தார்.  சிறிசேனாவும் இராசபக்சாவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சேர்ந்து கிரியல அவர்களைக் கவிழ்த்துப் போட்டார்கள் எனப் பேசப்படுகிறது.

இப்படி எல்லாம் ஆளாளுக்கு அமைச்சர் பதவி  கேட்டால் இரணில் விக்கிரமசிங்க  என்ன செய்வார்எங்கே போவார்யாரிடம் கேட்பார்?

 

ஜேஆர் பிரதமராக இருந்த போது கைகட்டி வாய்பொத்தி கொடுத்த அமைச்சுக்களை இரண்டு கையாலும் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இந்த அமைச்சுத்தான் அந்த அமைச்சு வேண்டாம் வேண்டும் என்று யாரும் முணுமுணுத்தது கூடக் கிடையாது. 1977 இல் ஜேஆர் பதவிக்கு வந்த போது அவரது அமைச்சில் இடம் பிடித்தவர் தெகிவளை – மவுண்ட்லேவினா நா.உறுப்பினர் எஸ்டிஎஸ் ஜெயசிங்க. பதவி ஏற்பதற்கு சில மணித்துளிகள் முன்பாக அவருக்கு ஒரு கடித உறை கொடுக்கப்பட்டது. அதைப் பிரித்துப்பார்த்தால் அவருக்கு மீன்வளத்துறை அமைச்சு ஒதுக்கப்பட்டிருந்தது. மனிதர் சைவம். ஜேஆரிடம் தான் சைவம் என்ற விடயத்தை மெல்லச் சொல்லி தனக்கு வேறு ஏதாவது அமைச்சைத் தருமாறு கேட்டார். உணவுக்கும் அமைச்சுக்கும் தொடர்பில்லை என்று ஜேஆர் மறுத்துவிட்டார்.

 

இரண்டு ஆண்டுகளாக  நாடு கடுமையான  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறதுசனாதிபதி சிறிசேனா தனது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் மூலம்  நாட்டைப் பாரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருந்தார்.  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து விட்டது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. பொருட்களின் விலை ஏறிக் கொண்டு போனது.வெளிநாட்டுக் கடன் சுமை கழுத்தை நெரித்தது.

 

ஐதேக  கடந்த 40 மாதங்களில் சாதிக்காதவற்றை அடுத்த 20 மாதங்களில் செய்து முடிக்கும் என்று எப்படி நம்புவதுவாக்களிப்போர் பெரும்பான்மை பவுத்த சிங்களவர்களாக இருக்கும் போது எதிர் வரும் தேர்தலில் ஐதேக வெல்லுமா என்ற கேள்வியும் பூதாகாரமாக எழுந்து நிற்கிறது.

 

மேலும் ஒக்தோபர் 26 க்கு முன்னர் யார் யார் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்கள்தான் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்கள்.  ஒக்ரோபருக்கு முன் எதையும் பெரிதாகச் சாதிக்காத அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

அதாவது மொந்தையும் பழசு! கள்ளும் பழசு!

Share the Post

You May Also Like