கட்டைக்காடு றோ.க.த.கவின் மேல்தளத்தை திறந்துவைத்தார் சுமந்திரன் எம்.பி.!

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கவைன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மேல் தளக் கட்டடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் இன்று திறந்து வைத்தார்.

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க வித்தியாலய சமூகம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேல்தளம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அவர்களது கோரிக்கை தொடர்பில் கரிசனை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், மேல் தளத்துக்கான நிதியை நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத விவகார அமைச்சிலிருந்து ஒதுக்கீடு மேற்கொண்டு கட்டத்தை நிறைவுசெய்துகொடுத்தார்.

இன்று அந்த மேற்தள கட்டட திறப்புவிழா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் பிரதமவிருந்தினராகக் கொண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர், வித்தியாலய சமூகம் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வித்தியாலய சமூகத்தால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

 

Share the Post

You May Also Like