இணுவில் மாணவர்களுக்கு சுமந்திரன் கல்வி ஊக்குவிப்பு!

உடுவில் கிழக்கு, இணுவிலில் அமைந்துள்ள அண்ணா சனசமூக நிலைய மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் கற்றல் உபகரணங்களும், மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியும் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

இணுவில் அண்ணா வாசிகசாலையினரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த உதவிகளை வழங்கி உதவினார்.

இந்த உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு ஒரு பெரு விழாவாக அண்ணா சனசமூகநிலையத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினரை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவித்து, அவர் ஊடாக இந்த உதவித் திட்டங்களை உரிய பயனாளிகளுக்கு சனசமூக நிலையத்தினர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like