இயக்கச்சி ஆதவன் விளையாட்டுக்கழகதிற்கு விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு

இயக்கச்சி பனிக்கையடி ஆதவன் விளையாட்டுக் கழகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச கட்சியின் விளையாட்டு இணைப்பாளர் ரஜிதன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க வட்டார உறுப்பினர் ரமேஷ் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த நிதி ஒதுக்கப்பட்டது.

இவ் உபகரணங்களை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி ஆகியோர் வழங்கிவைத்தனர் இங்கு  சபையின் உபதவிசாளர் கஜன் உறுப்பினர்கள் ரமேஷ்,வீரவாகுதேவர்,கோகுல்ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Share the Post

You May Also Like