தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிக்கான தெரிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிக்கான தெரிவுகள் இன்று காலை கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன .
நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா , சரவணபவன் , கட்சியின் பொருளாளர் கனகசபாபதி , நிர்வாக செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் முன்னிலையில் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

தலைவராக பிருந்தாபன் ( உடுவில் தொகுதி ) , செயலாளராக மாவை சேனாதிராசா கலை அமுதன் ( காங்கேசன்துறை தொகுதி ) , உப செயலாளராக கருணாகரன் குணாளன் ( ஊர்காவற்துறை தொகுதி , தீவகம் ) , உப தலைவர்களாக றேக்கன் ( கோப்பாய் ) , நிதர்சன் (மருதங்கேணி ) , பொருளாளராக தனபாலசிங்கம் சுதர்சன் ( சாவகச்சேரி ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட இளைஞரணி பொதுக்கூட்டமானது யாழ் .வீரசிங்கம் மண்டபத்தில் விரைவில் நடைபெறுமென்று அறியத்தரப்படுகின்றது.

Share the Post

You May Also Like