அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது: சுமந்திரன்

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளிலிருந்து இறுதிவரை பின்வாங்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ் கட்சி என்ற அடிப்படையில் கூட்டமைப்பு விளங்குவதாகவும், இந்நாட்டின் அரசியலமைப்பு அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு பிரதான தரப்புகளும் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த பொன்னான தருணத்தை இழந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் சபையை வலியுறுத்தினார்.

Share the Post

You May Also Like