அரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகிறார் மஹிந்த‍ – சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு அரசியல் திர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அன்று சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதனால்தான் யுத்தத்தை வெற்றிகொள்ள சர்வதேச நாடுகளின் உதவி கிடைத்தது. ஆனால் இன்று அவர் அரசியல் நோக்கத்தில் செயற்படுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர், சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபை இன்று காலை பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை முன்வைக்கப்பட்டு அதுதொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகள் தெரிவிக்கும் நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

இலங்கை பல இன, மத, சலாசாரங்களைச் சேர்ந்த பன்முக சமுகத்தினர் வாழும் நாடாகும். அந்த மக்களின் அடையாளங்கள் எப்போதும் நிலைத்திருக்கவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்களாக இருக்க வேண்டும். பல காரணங்களுக்காக நாங்கள் பிரிந்திருக்கலாம். அதனை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும்.

மேலும் புதிய அரசியலமைப்பு ஊடாக அதிகார பகிர்வு இடம்பெறும்போ பல நன்மைகள் கிடைக்கின்றன. கொழும்பில் மாத்திரம் அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. அதனால் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதனால் அதிகாரங்கள் மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றார்.

Share the Post

You May Also Like