வடலியடைப்பு உழவர் விழாவில் பிரதம விருந்தினராக சுமந்திரன்!

வடலியடைப்பு கலைவாணி கலைமண்றம் நடத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான உழவர் விழா 12 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு வடலியடைப்பு, பண்டத்தரிப்பில் அமைந்துள்ள கலைவாணி கலையரங்கத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்கின்றார்.

கலைவாணி கலைமன்றத் தலைவர் யோ.இராகவன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வே.தர்மபாலனும், முன்னாள் சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணி திருமதி ம.சாருஜாவும் கலந்துகொள்வர்.

கௌரவ விருந்தினர்களாக வடலியடைப்பு கிராம அலுவலர் சா.அருள்ஞானானந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.பத்மநாதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.றொபின்சன் ஆகியோரும் கலந்துகொள்வர்.

சிறப்பு நிகழ்வுகளாக சிறுவர் நடனம், கிராமியப் பாடல், சிலம்பாட்டம், தனிப்பாடல், குழு நடனம், ஒயிலாட்டம், தேசியவிருதுபெற்ற மாணவர்களைக் கௌரவித்தல், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கல் என்பவற்றுடன், குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நெறியாழ்கையில் உருவான ”உறவுகள்” நாடகமும், வடலியூர் கலைஞர்கள் வழங்கும் ”ஆச்சிக்குச் சொல்லாதே” நகைச்சுவை நாடகமும் இடம்பெறும்.

விழா ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

Share the Post

You May Also Like