வலிகாமம் வடக்கில் வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் அண்மையில் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தென்மயிலையில் வீட்டுத் திட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் முயற்சியால் வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதலாவது அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேச உதவிச் செயலாளர், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான பாக்கியநாதன் மரியதாஸ், பொ.தங்கராசா, சே.ககலையமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மயிலிட்டி பிரதேசமும் அதனோடு அண்டிய பகுதிகளும் விடுபடவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வலி.வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான மாவை சோ.சேனாதிராஜா முதலாவது மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். அதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் அனைவராலும் பல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தன.

மீள்குடியேற்றம் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்களை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனின் ஒழுங்கமைப்பில், மாவை. சேனாதிராஜாவின் தலைமையில் பல ஆர்ப்பாட்டங்களை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அருகிலும் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதே.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருமுறை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தற்போதைய அமைச்சர் மனோ கணேசனும் கலந்துகொண்டிருந்தனர். இவற்றின் பயனாக நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் மயிலிட்டி, பலாலி ஆகிய பிரதேசங்களின் பெரும்பாலான பகுதிகள் விடப்பட்டு, நேற்று தென்மயிலையில் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமையையிட்டு பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றிகளையும் தமது மகிழ்ச்சிகளையும் தெரிவித்துள்ளனர்.

Share the Post

You May Also Like