முதல்வர் கதிரையைப் பெற பேய், பிசாசுடன் விக்கி கூட்டு!

நக்கீரன்

யார் வாயை அடைத்தாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனது வாயை அடைக்க முடியாதுகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2015) த.தே.கூக்குள் இருந்து கொண்டு சுமந்திரன்சம்பந்தன்மாவை சேனாதிராசா போன்றவர்களை ஓரம் கட்ட  பிரேமச்சந்திரன் மின்னஞ்சல் மூலம் நிதிசேர்த்தார்ஆனால் இந்த மூவருக்கும் குறிப்பாக சுமந்திரனுக்கு குழிவெட்டப் போய் தானே அந்த குழிக்குள் விழுந்தார் என்பதுதான் வரலாறு.

சுமந்திரன் எடுத்த வாக்குகள் 58,043,  பிரேமச்சந்திரன் எடுத்த வாக்குகள் வெறுமனே 29,906 மட்டுமேஅப்படியிருந்தும் 42,925 வாக்குகள் பெற்ற அருந்தவபாலனை ஓரங்கட்டி விட்டுத் தேசியப்பட்டியலில் இருந்து தனக்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தர வேண்டும்  என்று அடம் பிடித்தார். அது கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன நரிமாதிரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டார். இப்படிப்பட்ட ஒருவர் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர்.

கொஞ்ச நாள்களுக்கு முன்னர் த.தே.கூ. இன் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு கறுவாக்காட்டில் பெரிய மாளிகை வீடுகளை சிங்கள அரசு கொடுத்திருக்கிறது,  கறுவாக்காட்டில் சுமந்திரனுக்கு சொந்தமாக பெரிய மாளிகை வீடு இருக்கிறது  எனச் சொன்னார்.

சம்பந்தர் ஐயாவுக்கு கொடுக்கப்பட்ட வீடு எதிர்க்கட்சித் தலைவருக்கு – அது யாராயிருந்தாலும் – கொடுக்கப்படுகிற  வீடுஅதற்கு முன்னர் சம்பந்தன் ஐயா பல ஆண்டுகளாக ஒரு தொடர்மாடிக் கட்டத்தில் ஓர் அறை கொண்ட பிளாட்டில்தான் குடியிருந்தார் சுமந்திரனுக்கு  கருவாக்காட்டில்  எந்த வீடும்  இல்லை. அவர் தனது சொந்த வீட்டில்தான் குடியிருக்கிறார்.  

மேலும்  சுமந்திரன் எந்தப் போராட்டத்தையும் வலியையும் சந்திக்காதவர் என்கிறார்அப்படியென்றால் விக்னேஸ்வரன் எந்தப் போராட்டத்தைச் சந்தித்தார்எப்போது அரசியலுக்கு வந்தார்? 2004 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்? பாலியல் சுவாமி பிரேமானந்தாவுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தி அவரது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியமையைவிட வேறு எதனைச் செய்தார்? 

இதில் வேடிக்கை என்னவென்றால்,  2018 மார்ச் மாதத்தில்  நடந்த தேர்தலில்  தனது கட்சியில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் துணிவில்லாத பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியுடன் கூட்டணி வைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இருந்தும் வட மாகாணத்தில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 36,183 மட்டுமே. கிழக்கு மாகாணத்தில் பெற்ற வாக்குகள் 37,428 ஆகும். பிரேமச்சந்திரன் தனித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியில் போட்டியிட்டடிருப்பாராயின் இதில் பாதி வாக்குகள் கூடக் கிடைத்திராது!

இரண்டு நாள்களுக்கு முன்னர் நடந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின்  பிரந்திய மாநாட்டில் பேசிய பிரேமச்சந்திரன் இன்றிருக்கக்கூடிய சர்வதேச சூழல்இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கைஅரசாங்கத்தின் ஏமாற்றுத்தனங்கள்இழுத்தடிப்புக்கள் என்பவற்றின் பின்புலத்திலும் உள்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர் தமிழ் மக்கள்தமிழக தமிழ் மக்கள் என்ற களத்தில் நின்றும் இவ்விடயங்களைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள்துறைசார் நிபுணர்கள்சமூக சான்றோர்களை உள்ளடக்கி எமது நகர்வுகள் அமைய வேண்டும். இதனை நிறைவேற்ற எல்லோரும் ஓரணியில் திரள்வோம் என சபதமேற்போம் என சங்கநாதம் செய்துள்ளார்.

முதலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி), ஈ.பி.ஆர்.எல்.எவ். (சுரேஸ் அணி,)  ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) இவற்றை ஒன்று சேருங்கள் பார்க்கலாம்.  மற்றவற்றைப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், கூட்டமைப்பை உடைத்து வெளியேறியவர் யார்ஒற்றுமையைச் சிதைத்தவர்  யார்பிரேமச்சந்திரன் இல்லையாஅப்படிப்பட்டவர் எப்படி எல்லோரும் ஓரணியில் திரள்வோம்  சபதமேற்போம்” என சங்கூத முடியும்?

போகட்டும். எத்தனையோ ஆண்டுகள் கழிந்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்துவிடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநித்துவத்தை ஆதரித்து  அரசியல் செய்த  ஈ.பி.ஆர்.எல்.எவ். புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை இப்போது வெளியிடுவதன் அவசியம் என்ன?  நோக்கம் என்ன? நொந்த புண்ணைக் குத்துவதால் அடையும்  பயன்  என்ன?

இதில் கொடுமை என்ன வென்றால் அந்த ஆவணத்தை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்திருக்கிறார். அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.  அமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிராந்திய மாநாட்டின் சிறப்பு  விருந்தினர்.  விக்னேஸ்வரனது இன்றைய நப்பாசை தான் முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும் என்பதே. அதற்காக அவர் எந்தப் பேய்பிசாசுடனும் கூட்டணி வைக்க  அணியமாக இருக்கிறார்!

கொஞ்ச நாள்களுக்கு முன்னர்தான் “அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்து கொண்டே நாம் செயற்பட வேண்டும். இதனையே மக்கள் விரும்புகின்றார்கள்”  என்று  கூறியிருந்தார்.

இதனை  புலிகள் போலவே நாங்களும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் அவரது அடிவருடிகள் சொல்கிறார்கள்.

மேற்கண்டவாறு  பேசிய விக்னேஸ்வரன் புலிகளால் கொல்லப்பட்ட  ஈ.பி.ஆர்.எல்.எவ்கட்சித் தோழர்களின்  பெயர்கள்,   புலிகளால்  

கொல்லப்பட்ட ரெலோ உறுப்பினர் பட்டியல் அடங்கிய ஆவணத்தைப்  பூரிப்போடு வெளியிட்டு வைத்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள்பொது மக்கள் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்று விக்னேஸ்வரன் சுரேஸ் பிறேமச்சந்திரனைக் கேட்கவில்லைதம்பி பிரபாகரனையும் ஒரு கொலையாளியாகவும்  அவர் உருவாக்கிய இயக்கத்தை  கொலைகாரக் கும்பல் எனச் சித்திரிக்கிறீர்கள்  என ஏன்  விக்னேஸ்வரன் கேட்கவில்லை.

”மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?” தாவது விடுதலைப் புலிகள் போட்டுத் தள்ளிய தோழர்கள் பட்டியல் வெளியிட்டது சரி என்றால்  ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்டுத்தள்ளிய மாற்று அமைப்புக்களின் உறுப்பினர் பட்டியல் எங்கே?  கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட பொதுமக்கள் பட்டியல் எங்கே?

ஈ.பி.ஆர்.எல்.எவ். வதை முகாமாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய  அசோக் ஹோட்டலில் இருந்து காற்றில் கலந்த பொது மக்களின் அழுகுரல்கண்ணீர் ஓலம்ஐயோ என்ற அலறல் இன்றும் துல்லியமாகக் கேட்கிறதே!

ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற அலங்காரப் பெயரைவிட அந்த அமைப்புக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் மண்டையன் குழு. இது ஒரு காரணப் பெயர். பொது மக்களது மண்டையைக் கோடாலி,சுத்தியல்கத்தியால் பிளந்து கொன்ற காரணத்தால்  “மண்டையன் குழு” என்று மக்கள்  அந்த அமைப்புக்கு பட்டயம் சூட்டினார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். எண்பதுகளில் எப்படிச் செயற்பட்டது அதன் இலட்சணங்கள் என்ன என்பதை சபா. நாவலன் என்றொரு முன்னாள் போராளி இப்படி எழுதியிருக்கிறார். இது  ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவம் செயற்பட்டது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக் கும்பலாகவே தன்னை இது அறிமுகப்படுத்தியது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன.

தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம், இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது.

1988 ஆம் நடுப்பகுதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாப்பற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம்.(https://inioru.com/ltte-eprlf-ipkf-the-converging-point/)

இந்த நேரத்தில்  சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான .பி.ஆர்.எல்.எவ் என்ற அமைப்பு விக்னேஸ்வரன் பிரசவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியோடு கூட்டு வைத்துக் கொண்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின்)  தலைவர் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டணியோடு ஒருபோதும் சேரோம் என்று  சபதம்  செய்துள்ளார்.

எனவே எந்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்துக்கும் ஆளாகாமல் சொன்ன சொல்லை கஜேந்திரகுமார் காப்பாற்ற வேண்டும். இந்த ஒன்றிலாவது அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றி அரசியலில் தானோர் அரிச்சந்திரன் அல்லது குறைந்தபட்சம் அரிச்சந்திரனின் அடுத்த வீட்டுக்காரன் என்பதை எண்பிப்பார் என மனதார  நம்புகிறோம்!

Share the Post

You May Also Like