குடத்தனைக்கு சுமந்திரன் நிதியில் கலையரங்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் றிதி ஒதுக்கீட்டில் கம்பெரலியா திட்டத்தின்மூலம் குடத்தனை அமெரிக்கன்மிசன் பாடசாலைக்கு 10 லட்சம் ரூபா செலவில் கலையரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற நிதியில் அமைக்கப்பட்ட கலையரங்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் பாடசாலையின் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like