புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பாடசாலையின் மைதானப் புனரமைப்புக்காக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் 10 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கிராமிய அபிவிருத்தி நிதியின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் அண்மையில் புனரமைக்கப்பட்ட புதிய மைதானத்தில் நடைபெற்றன.இந்த நிகழ்வுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்துள்ளார்.