மணற்காடு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு புதிதாக அமைக்கப்பட்ட மைதான நுழைவாயில், கலையரங்கு என்பனவற்றை மாணவர்களின் பாவனைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் நேற்றுமுன்தினம் திறந்துவைத்து பாடசாலைச் சமூகத்திடம் கையளித்தார்.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வன்மை நிகழ்வும் கல்லூரியில் இடம்பெற்றது. அந்த நிகழ்விலும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியில் கம்பெரலியா திட்டத்தின் மூலமே இந்தக் கலை அரங்கும் மைதான நுழைவாயிலும் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.