தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பான பிரேரணை ஒன்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரேரணை தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ளும் நோக்கில் ஆதவன் செய்திச் சேவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளிக்கும் போதே, கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவளிக்காது என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித ஒத்துழைப்பையும் வழங்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like