மாவையின் நிதியில் மயானம் புனரமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் இளவாலை சித்திரமேழி இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி செயலாளருமாகிய சோமசுந்தரம் சுகிர்தனின் சிபாரிசுக்கமைய, கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிதியின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வை சோ.சேனாதிராசா இந்த மயானப் புனரமைப்புக்காக 15 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வலி.வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா, வலிகாமம் வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரின் முயற்சியால் துரித அபிவிருத்தி கண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like