இளைஞர்கழகங்களுக்கு மாவையின் நிதியில் விளையாட்டு உபகரணங்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உ|றுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவரும் வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் இளைஞர் கழகங்களை வலுவூட்டுவதற்காக 10 லட்சம் ரூபா செலவில் வலி.வடக்கில் உள்ள 33 இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் வேண்டுகைக்கு அமைவாக, வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனின் சிபாரிசின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவால் நிதி ஒதுக்கப்பட்டு இந்த உபகரணங்கள் கொள்வளவு செய்யப்பட்டன.

வலி.வடக்கு இளைஞர் கழகங்களை வலுப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.|சேனாதிராசா 2017 ஆம் ஆண்டுக்கான தனது நிதியில் இருந்தும் 10 லட்சம் ரூபாவை விளையாட்டு உபகரணக் கொள்வனவுக்காக ஒதுக்கியிருந்தார். தற்போது இரண்டாவது கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

இந்த விளையாட்டு உபகரணங்களை இளைஞர் கழகங்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு வலி.வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று 11-02-2019 திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேச செயலர் சிவஸ்ரீ மற்றும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செ.விஜயராஜ், ஐ.மயூரன், மாவை சே.கலையமுதன் ஆகியோர் கலந்து இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களைக் கையளித்தனர்.

 

Share the Post

You May Also Like