சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளர் சிறீதரன் எம்.பி முக்கிய சந்திப்பு!

வடமாகாணத்திற்கு விஜயம் செய்த சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக முதன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை கிளிநொச்சியில் சந்தித்து தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வடமாகாணத்தில் தமிழ் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் எப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள் என்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்காக இன்றைய தினம் 12.02.2019 வடமாகாணத்திற்கு விஜயம் செய்த சுவிஸ் நாட்டின், இலங்கைக்கான தூதரக முதன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப் அவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து காலை 9.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது வடக்கில் மக்கள் வாழ்விடங்களில் தற்போதும் இராணுவம் முகாமமைத்துத் தங்கியுள்ளமையால் மக்கள் வாழ்வதற்கு வாழ்விடமின்றி வீதிகளில் படுத்துறங்கி தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரிப் போராடி வருகின்றார்கள், வடக்கில் உள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, குறிஞ்சாத்தீவு உப்பளம் போன்ற பல தொழிற்சாலைகள் தற்போது வரை இயங்காத நிலையில் உள்ளமையால் வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் இல்லாத நிலை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள், முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு, காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனப் பல பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

Share the Post

You May Also Like