மாவையின் நிதியில் வலி.வடக்கில் வீதி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் ஊடாகக் கம்பெரலியா நிதி மூலம் தெல்லிப்பழை தந்தை செல்வாபுரத்தில் பூந்தோட்ட வீதி புதிதாக அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வட்டாரம் 13  துர்க்காபுரம், தந்தை செல்வாபுரம் ஆகியவற்றின் பிரதேச சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி உப செயலாளருமாகிய லயன் சி.ஹரிகரனின் கோரிக்கைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா கம்பெரலியா திட்டத்தின் ஊடாக இந்த வீதி அமைப்புக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.

20 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீதி  417 M நீளமானது என்பதுடன் பிரதேச மக்கள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தவிசாளர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் பிடியில் இருந்த வலி.வடக்கு காணிகள் தற்போது மாவை சேனாதிராசாவின் முயற்சியால் துரிதமாக விடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அதேவேகத்தில் அபிவிருத்திப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவையும் வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தனும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like