யாழில் தமிழரசின் இளைஞர் முன்னணி மாநாடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் யாழ். மாவட்ட மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் முன்னணியின் யாழ். மாவட்டத் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் நடைபெறும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் வாழ்த்துரையையும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., ஜனாதிபதி சட்டத்தரணி பே.ரி. தவராஜா ஆகியோர் சிறப்புரையும் ஆற்றுவர்.
பிரதான உரையைக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. வழங்குவார்.
Share the Post

You May Also Like