சாவகச்சேரி இந்துவுக்கு சுமந்திரனால் நிழற்குடை!

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தனது செயற்றிட்ட விசேட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நிழற்குடையை நேற்று திறந்துவைத்தார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரிச் சமூகம், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, அவரது சிபாரிசுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த நிழற்குடைக்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.

நேற்று கல்லூரியின் அழைப்பின் பேரில் கல்லூரிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து நிழற்குடையைத் திறந்துவைத்தமையுடன், கல்லூரிச் சமூகத்தால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தனும் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like