மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு சுமந்திரனின் நிதியில் சிற்றுண்டிச்சாலை!

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் புதிய சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டு, நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அதனைத் திறந்துவைத்தார்.

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய சமூகம் தமது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி சிற்றுண்டிச்சாலை அமைத்துத் தருமாறு வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

சட்டத்தரணி கேசவன் சயந்தனின் சிபாரிசுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்தத சிற்றுண்டிச்சாலைக்கான நிதியை ஒதுக்கியுள்ளார். சிற்றுண்டிச்சாலை கட்டட வேலைகள் பூர்த்தியாகி நேற்று கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிற்றுண்டிச்சாலை பாடசாலையின் பாவளைக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் நாடாளுமன்ற உறுப்பினருடன் பங்குகொண்டார்.

Share the Post

You May Also Like