இயக்கச்சி தபாலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் நிதி ஒதுக்கீடு

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி உப தபாலகத்தின் நிரந்தர கடடடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் 1.5  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமண்யம் சுரேன் தெரிவித்துள்ளார்.
இயக்கச்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்ட்ங்கள் தொடர்பாக பொது அமைப்புகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்று முன்தினம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது  இங்கு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்துரைத்த தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒதுக்கீட்டின் மூலம் இயக்கச்சி வட்டாரத்தில் கோவில்வயல் மில் வீதிக்கு இரண்டு மில்லியன் ரூபாயும், கொற்றாண்டார் குளம் உள்ளக வீதிக்கு 1.15மில்லியன்  ரூபாயும் விநாயகபுரம் சிறுவர் பூங்காவிற்கு 0.5 மில்லியன் ரூபாயும் இயக்கச்சி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஒரு மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடடார். அத்துடன் பிரதேசத்தின் அபிவிருத்திகளை  துரித கதியில் முன்னெடுப்பதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான அபிவிருத்திகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
இங்குபச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் கஜன் உறுப்பினர் ரமேஸ் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Share the Post

You May Also Like