விசுவமடுவுக்கு சாள்ஸ் மூன்று மில்லியன் நிதி

2019ம் ஆண்டுக்கான கம்பரெலியா வேலைத்திட்டத்தின் கீழ்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு பகுதியிலுள்ள புத்தடி புதுமை விநாயகர் ஆலய சுற்றுமதில், பாரதிபுரம் விளையாட்டு மைதான புனரமைப்பு, நெத்தலியாறு பொது விளையாட்டு மைதான புனரமைப்பு மற்றும் விஸ்வமடு கிழக்கு விளையாட்டு மைதான புனரமைப்பு ஆகியவற்றுக்கு மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்’னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  அதற்கான வேலைத்திட்டத்தினை நேற்று முன்தினம் (10.03.2019) ஆரம்பித்து வைத்தும் அப்பகுதி மக்களை சந்தித்து ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

Share the Post

You May Also Like