தமிழின வரலாறு பாடபுத்தகத்தில் இடம்பெறவேண்டும் – சு.சுரேன்!

தமிழ் இனத்தின் வரலாறு பாடப்புத்தகங்களில் பதிவுசெய்யப்படவேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் பாடசாலை அதிபர் ஜோ ன் செல்வரட்ணம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இங்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிடடார். இங்கு மேலும் குறிப்பிடுகையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் உலகமயமாதலுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப ரீதியாகவும் தங்களை வளர்த்துக்கொள்வதனூடாகவே  போட்டி மிகுந்த சூழலில் சிறந்த துறைகளில் வெற்றிபெற முடியும் என்கிறார்.
அத்துடன் பாடசாலையின் பௌதீக தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் கலந்துரையாடி தீர்த்துவைப்பதாகவும் குறிப்பிடடார் . இந்நிகழ்வில் கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் சி சிவரூபன் , பளை கோ ட் ட கல்வி பணிப்பாளர் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் ,அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்ரார் என பலரும் கலந்துகொண்டனர்.
Share the Post

You May Also Like