திருகோணமலை மூ.அ.த.க.வுக்கு மதிலுக்கு ஒரு மில்லியன் ரூபா!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூர் பள்ளிக்குடியிருப்பு சின்னக்குளம் அ.த.க. பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோரின் முயற்சியால் கம்பெரலியா திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபா மதில் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மதில் வேலைகளுக்கானஆரம்ப நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், மூதூர் தமிழரசுக் கட்சி கிளைக்குழுத் தலைவர் தர்சன், மூதூர் கிளைக் குழு தமிழரசின் செயலாளரும் பளளிக் குடியிருப்பு வட்டாரத் தலைவர் ஆ.செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் வி.பாக்கியராஜா தலைமை வகித்தார்.

Share the Post

You May Also Like