ஐ.நா.தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு இடமளிக்க கூடாது! – கூட்டமைப்பு

ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை நீர்த்துபோகச்செய்ய இலங்கை அரசாங்கம்  முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு  இடமளிக்கக் கூடாது என கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனீவாவுக்கு சென்றுள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவிற்கான தெற்காசிய தலைவர் ஃபெர்கஸ் அகுட்டை  கடந்த 15 ஆம் திகதி சந்தித்த போதே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையில் பிரித்தானியா கொண்டுவந்த புதிய தீர்மானத்திற்கும் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். அத்தோடு 30/1 இல் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வலியுறுத்துமாறும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சந்திப்பின் போது உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஜே.இம்மானுவேல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய அலுவலகத்திற்கான தலைவர் ரட்ணசிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like