தமிழ் கலாசாரத்தை ஆக்கிரமித்து வரலாற்றை மாற்றியமைக்க முயற்சி: சரவணபவன்

தமிழ் கலாசார மையங்களாக ஆக்கிரமித்து அவற்றை பௌத்த பூமியாகக் காட்டி வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் மக்களின் கலாசாரத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும். இவை கண்டிக்கத்தக்கதுடன், தடுத்து நிறுத்த வேண்டிய அத்துமீறல்களாகும்.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது கலாசார மையங்களாக விளங்கும் ஆலயங்கள் அமைந்துள்ள வளாகங்களை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.

அதுமாத்திரமன்றி அவற்றை பௌத்த பூமியாக காட்டி வரலாற்றை மாற்றியமைக்க முற்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like