யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலாசார நிலையங்கள் அவசியம் – சிறிநேசன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாசார நிலையங்களை அமைக்க அமைச்சர், சஜித் பிரேமதாஸ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிநேசன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் 5 பிரதேச செயலங்களில் மாத்திரமே கலாசார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய 9 செயலங்களில் கலாசார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர், சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளேன்.

எனவே, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாசார நிலையங்களை அமைக்க அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share the Post

You May Also Like